அடிசில்: பச்சைப் பட்டாணி மசாலா

Tuesday, October 26, 2010

பச்சைப் பட்டாணி மசாலா


பச்சைப் பட்டாணி... 
 
இது, வெஜிடபிள் பிரியாணி, மிக்ஸ் வெஜ் குருமா, பட்டாணி சுண்டல், புலாவ்ன்னு பலவகை உணவுப்பதார்த்தங்களில் நாம அடிக்கடி பயன்படுத்துகிற ஒன்று.

இந்தப் பச்சைப் பட்டாணியில், உடம்புக்குத்தேவையான  8 விட்டமின்கள்,
7  தாதுப்பொருட்கள், இன்னும் தேவையான அளவு நார்ச்சத்தும் இருக்கிறது. எலும்பு  வளர்ச்சிக்குத் தேவையான,மிக இன்றியமையாத விட்டமின் K இதில் இருப்பதால்  வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் இன்றியமையாததென்பதால், அடிக்கடி பட்டாணியைப் பயன்படுத்துவது நல்லது.
 
பட்டாணி குருமாவுக்குத் தேவையான பொருட்கள்...


காய்ந்த பச்சைப் பட்டாணி 
அல்லது உரித்த பச்சைப் பட்டாணி - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி(பெரியது) - 1

பச்சைமிளகாய் -2

இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு

பூண்டு - 3 பல்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

வத்தல் தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு

பட்டை கிராம்பு -தாளிக்க 

உப்பு தேவையான அளவு

எண்ணெய் - அவரவர் தேவைக்கேற்ப 

பட்டாணியை முந்தின நாள் இரவே ஊறவிட்டு, பிரெஷர் குக்கரில் வேகவச்சு எடுத்துக்கணும்.

தேங்காயுடன்,சோம்பு,தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு எல்லாவற்றையும் சேர்த்து அரைச்சு வச்சுக்கணும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு சேர்த்து வெடிக்கவிட்டு, அதில் அரைத்த மசாலாக் கலவையைக் கொட்டி வதக்கணும்.அதோட, வத்தல், மல்லி, மஞ்சள் தூளையெல்லாம் சேர்த்து வதக்கணும்.
கலவையிலிருந்து எண்ணெய் பிரிகிற சமயத்தில் பச்சைப் பட்டாணியைச் சேர்த்து, தேவையான உப்பும் அரை கப் தண்ணீரும் சேர்த்து மூடியிட்டு, குறைந்த தீயில் அஞ்சு நிமிஷம் வைக்கணும்.

கலவை நன்குகொதிச்சு வரும்போது,கரம்மசாலாவைச் சேர்த்துக் கிளறிவிட்டு, கடைசியா பொடியா நறுக்கிவச்ச கொத்துமல்லியைத் தூவி இறக்கணும். இது கூட்டுப்பதத்தில் இருக்கும். தோசை சப்பாத்தியோட சாப்பிட நன்றாக இருக்கும்.

இந்தக் குருமாவை இன்னும் கொஞ்சம் தண்ணீர் வற்றவிட்டு, கொஞ்சம் கெட்டியான பிறகு இறக்கினா ரசம் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.

பச்சைப்பட்டாணியை ஃப்ரெஷ்ஷா வாங்கி உரித்துச் செய்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

No comments:

Post a Comment

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!