அடிசில்: முட்டை மிளகுப் பால்

Tuesday, October 26, 2010

முட்டை மிளகுப் பால்நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில், குளிர்காலத்தில் வரக்கூடிய நெஞ்சுச்சளி, ஜலதோஷம் இவற்றிற்கெல்லாம் மருந்தாகத் தரப்படுவது இந்தப் பால்.

தயாரிப்பதும் பெருசா ஒண்ணும் கஷ்டமில்லை...

தேவையான் பொருட்கள்...

முட்டை - 1

பால் - 1 கப்

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

சர்க்கரை - 2 தேக்கரண்டி

முட்டையுடன் மிளகுத்தூள், சர்க்கரை இரண்டையும் சேர்த்து நல்லா நுரைவரும்படி அடிச்சுக்கணும்.

பாலைக் கொதிக்கவைத்து இறக்கி,நல்ல சூடாக இருக்கும்போதே, அடித்துவைத்த முட்டைக் கலவையில் ஊற்றி, நன்றாக ஆற்றவேண்டும். இந்தப் பாலை,சுடச்சுட ஒன்றிரண்டு நாட்கள் அருந்தினால், சளி ஜலதோஷமெல்லாம் பறந்துபோயிடும்னு சொல்லுவாங்க.

இங்கே, முக்கியமாகக் கவனிக்கவேண்டியது ரெண்டு விஷயம்...

ஒண்ணு, பால் நல்ல சூடா இருக்கணும்.

இன்னொண்ணு, முட்டைக் கலவையோட பாலைச் சேர்த்து வேகமாக ஆற்றவேண்டும். (டீக்கடையில டீ ஆற்றுவாங்கல்ல...அதுமாதிரி)
அப்பதான், பாலில் முட்டை திரிதிரியாக இல்லாமல் நன்றாகச் சேர்ந்திருக்கும்.

முயற்சிசெய்துதான் பாருங்களேன்...

*********************

4 comments:

 1. மிளகு தட்டி போட்டு பாலில் கலந்து குடிப்பேன் நோ முட்டை

  ReplyDelete
 2. வாங்க கார்த்திக் :)

  இந்தத் தளத்திற்குக் கிடைத்திருக்கும் முதல் பின்னூட்டம் உங்களோடதுதான்...நன்றி!

  ReplyDelete
 3. முதல் பாலோவரும் நாந்தான். தனி விருந்து வேண்டும் இப்பவே சொல்லிட்டேன்

  ReplyDelete
 4. விருந்துதானே...குடுத்துட்டாபோச்சு :)

  சைவ சமையல்ல பிடிச்சதைச் சொல்லுங்க...ரெசிபி போட்டுருவோம். நீங்க வீட்ல சமைச்சு சாப்பிட்டுக்கங்க :)

  தொடந்துவரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி கார்த்திக்!

  ReplyDelete

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!