அடிசில்: பொரியரிசி உருண்டை

Wednesday, October 27, 2010

பொரியரிசி உருண்டை


பொரியரிசி என்றதுமே, ஆச்சி வீட்டில், கருப்பட்டிக் காப்பிக்குள் கைநிறைய அள்ளிப்போட்டு ஊறவிட்டுக் குடித்த அன்றைய ஞாபகம்தான் நினைவில் வருகிறது.

இதுவும் குழந்தைகளுக்குச் சட்டென்று செய்துதரக்கூடிய சுவையான ஒரு பலகாரம்தான். கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்ததுபோலிருக்கும்.

புழுங்கலரிசி - 1 கப்

காய்ச்சிய பால் - 1 கப்

சர்க்கரை- தேவைக்கேற்ப

வெறும் வாணலியில், அரிசியைப்போட்டு, சிறுதீயில் வைத்துப் பதமாக வறுத்து எடுத்துக்கணும்.

வறுத்தெடுத்த அரிசியை ஆறவிட்டு மிக்சியில் நைசாகப் பொடிபண்ணிக்கோங்க.

பொடியாக்கிய மாவில் தேவையான சர்க்கரை கலந்து, வெதுவெதுப்பான பாலை ஊற்றிப் பிசைந்து, உருண்டைகளாகப் பிடிச்சுக்கோங்க.

சுவையான பொரியரிசி உருண்டை தயார். இதைக் குழந்தைகளுக்கு மாலை நேர டிபனாகச் செய்துதரலாம்.

*************************

5 comments:

 1. அருமையாக இருக்கு.

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்துக்கும்

  நன்றிகள் ஆசியா!

  நன்றிகள் நித்திலம்!

  ReplyDelete
 3. பொரிஅரிசி உருண்டை முன்பு அடிக்கடி செய்வேன் குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது. அந்த நாள் நினைவு வந்து விட்டது.

  ReplyDelete
 4. :) வருகைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!