அடிசில்: தக்காளித் தொக்கு

Sunday, October 31, 2010

தக்காளித் தொக்கு


பெரிய தக்காளி -3

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் பொடி- 1/4 தேக்கரண்டி

வத்தல்பொடி - 1/2 தேக்கரண்டி

சாம்பார்ப்பொடி - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 இணுக்கு

எண்ணெய் - 3 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு

உப்பு - தேவையான அளவு

தக்காளியையும் வெங்காயத்தையும் பொடியா நறுக்கிவச்சுக்கோங்க.
பச்சை மிளகாயைக் கீறிக்கோங்க.

வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகையும் கொஞ்சம் அதிகமாகவே உளுத்தம்பருப்பையும்போட்டு , கடுகுவெடிச்சதும் கறிவேப்பிலையைச் சேருங்க.

அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து,சிறிது உப்பையும் சேர்த்து வதக்குங்க.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைப்போட்டு, தக்காளி கரையுமளவுக்கு வதக்குங்க.

வதக்கும்போதே, மஞ்சள்,வத்தல் சாம்பார்ப்பொடிகளையும் சேர்த்து வதக்கி, உப்பு சரிபார்த்து, எண்ணெய் பிரிந்துவரும் சமயத்தில் இறக்குங்க.

இந்தத் தக்காளித்தொக்கில், இதுமாதிரி,தண்ணீரே சேர்க்காமல்செய்தால், பயணங்களுக்கு எடுத்துச்செல்ல வசதியாக இருக்கும்.மறுநாள் வரைக்கும் கெடாமலும் இருக்கும்.

சப்பாத்தி, இட்லி தோசை எல்லாவற்றிற்கும் மேட்ச் ஆகும்.

*****************

10 comments:

 1. தக்காளி தொக்கில் சாம்பார் பொடி சேர்ப்பது வித்தியாசமாக இருக்கு.ரெசிப்பி படம் போட்டால் அருமையாக இருக்கும்.

  ReplyDelete
 2. என்ன தக்காளி வாரமா ??

  ReplyDelete
 3. சாம்பார்ப்பொடி சேர்ப்பதால் வாசனை அருமையாக இருக்கும்.

  இனிவரும் பதிவுகளில் படம் போட முயற்சிக்கிறேன் ஆசியா. (ஆனா, உங்க அளவுக்கெல்லாம் முடியாது :))

  ReplyDelete
 4. தீபாவளிக்கு தக்காளி தொக்கு சொஞ்சிடவேண்டியதுதான்! ஹிஹிஹிஹி................

  ReplyDelete
 5. //LK said...

  என்ன தக்காளி வாரமா ??//

  ஆமா கார்த்திக் :)

  சிக்கன் போட நான் தயார்...ஆனா, உங்களுக்கெல்லாம் ஆகாதில்லே... :)

  ReplyDelete
 6. THOPPITHOPPI said...

  //தீபாவளிக்கு தக்காளி தொக்கு சொஞ்சிடவேண்டியதுதான்! ஹிஹிஹிஹி................//

  தீபாவளிக்கு ஸ்வீட் செய்யிங்க...தக்காளித்தொக்கு சாவகாசமாக்க்கூட செய்யலாம் :)

  ReplyDelete
 7. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

  ReplyDelete
 8. //
  சிக்கன் போட நான் தயார்...ஆனா, உங்களுக்கெல்லாம் ஆகாதில்லே..//

  அதே அதே

  ReplyDelete
 9. //Eeva said...

  நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!//

  விரைவில் எழுதுகிறேன்...நன்றிங்க!

  ReplyDelete
 10. idhu kooda konjam iraal serthu samaichu paarunga idly vaiyithukkulla poradhe theriyaadhu . Arumaiyaana thakkaali thokku

  ReplyDelete

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!