அடிசில்: நாட்டுத் தக்காளிக் கூட்டு

Tuesday, October 26, 2010

நாட்டுத் தக்காளிக் கூட்டு


கூட்டுன்னு சொன்னதும் அவிச்சு பொரிச்சு செய்யக்கூடியதுன்னு நினைச்சிராதீங்க. இது கிராமங்களில் செய்யப்படும் அடுப்பிலேற்ற அவசியமில்லாத அவசரக் கூட்டு. இரவு உணவுக்கும் சட்டென்று கூட்டுவைக்க நேரமில்லாதபோதும் செய்யக்கூடியது, பருப்புக்குழம்பு, மற்றும் சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்...

நாட்டுத்தக்காளி - 3

சின்ன வெங்காயம் - 20

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

தக்காளியை மெலிதாக நறுக்கிக்கோங்க.

சின்ன வெங்காயத்தையும் மெலிதாக நீளவாக்கில் அரிந்து வச்சுக்கோங்க.

கறிவேப்பிலையைக் கிள்ளிப்போடுங்க.

சீரகத்தை உள்ளங்கையில் வைத்து சிறிது நசுக்கிப் போடுங்க.

தேவையான உப்புப்போட்டுக் குலுக்கி ஐந்து நிமிடம் வைத்துவிட்டு, சுடுசாதத்துடன்  பரிமாறுங்க.

**************

No comments:

Post a Comment

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!