அடிசில்: எள்ளுப் பிடிஉருண்டை

Tuesday, October 26, 2010

எள்ளுப் பிடிஉருண்டை

இதுவும் அந்தக்காலத்தில் விரும்பிச் சாப்பிட்ட ஒரு பதார்த்தம்.
எள்ளும் வெல்லமும் சேர்த்தா உடம்புக்கு அத்தனை வலிமை கிடைக்குமாம்.
நீங்களும் சாப்பிட்டுப்பாருங்க.

கறுப்பு எள் - 1 1/2 கப்

பொடித்த வெல்லம் - 1/2 கப்

எள்ளை வாசனை வருமளவுக்கு வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கங்க.

ஆறியதும் வெல்லத்தோடு சேர்த்து மிக்சியில் அரைச்சு எடுத்து சின்னச்சின்ன உருண்டைகளாகப் பிடிச்சுக்கங்க.

வாசம் ஊரைக் கூட்டும். ருசியோ அடிக்கடி செய்யச்சொல்லிக் கேட்கும்.

**************

2 comments:

  1. எள் உருண்டை ஊரைத்தான் கூட்டும்.
    எங்கள் வீட்டில் பிள்ளையார் சதுர்த்திக்கு செய்வோம் என் மகனுக்கு மிகவும் பிடித்த பல்காரம்.

    ReplyDelete
  2. எனக்கும் மிகவும் பிடிக்கும் :)

    வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!