அடிசில்: கட்டிப்பருப்பும் வறுத்த ரசமும்!

Tuesday, November 2, 2010

கட்டிப்பருப்பும் வறுத்த ரசமும்!

வித்தியாசமா என்னென்னவோ விருந்தெல்லாம் சாப்பிட்டாலும், வீட்ல செய்துசாப்பிடுற இந்த ரசத்துக்கும் பருப்புக்கும் இருக்கிற மவுசு தனிதாங்க.சட்டுன்னு செய்யலாம்...ஜீரணமும் எளிதில் ஆகும். குழந்தைங்க பெரியவங்க எல்லாருக்கும் ஏற்றது. உடம்பு சரியில்லாதப்பகூட சாப்பிடக்கூடியதுன்னு இன்னும் சொல்லிட்டே போகலாம்.

வெறும் ரசத்துக்கும் பருப்புக்கும் இவ்வளவு பில்டப்பான்னு யோசிக்கிறீங்கல்ல :) இந்தக் கட்டிப்பருப்பும் கலர்ஃபுல் வறுத்த ரசமும் எங்க மாமியாரின் கைவண்ணம். நீங்களும் செய்துபாருங்க...

பருப்புக்கு...

துவரம் பருப்பு - 1 கப்

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 3

பூண்டுப் பல் - 2

பெருங்காயம் - 1 சிட்டிகை

தாளிக்க...

கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை.

பருப்பைக் கழுவி, தக்காளி,வெங்காயம் பச்சை மிளகாய், பூண்டு,பெருங்காயம் சேர்த்து பிரெஷர் குக்கரில் வேகவிடுங்க.

 


வெந்த பருப்பை நல்லா மசிச்சுக்கோங்க.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி,கடுகு, உளுந்து,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து,அதில் நன்றாக வெந்த பருப்பைக் கொட்டி, உப்புப்போட்டு ஒருநிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிடுங்க.

இனி, கலர்ஃபுல் வறுத்த ரசத்துக்கு...

எலுமிச்சையளவு புளியை ஊறவைத்து, அதிலிருந்து புளிக்கரைசலை வடிகட்டித் தனியே வச்சுக்கங்க.

ஒரு தக்காளியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அந்தப் புளித்தண்ணீரில் போட்டுக் கரைச்சு விடுங்க.

மிளகு, ஜீரகம், இரண்டு பல் பூண்டு,ஒரு இணுக்கு கறிவேப்பிலை, ஒரு மேஜைக்கரண்டி தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுத்துக்கங்க.

ஒரு கைப்பிடியளவு கொத்துமல்லி இலை நறுக்கி வச்சுக்கோங்க.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளிச்சு, அதில் அரைத்துவைத்த பொருட்களைத் தட்டி, லேசா வறுத்துக்கோங்க.( தீயின் அளவைப்பொறுத்து, அரை நிமிஷத்திலிருந்து ஒரு நிமிஷம் போதும்)

வறுத்து வாசனை வரும்போது, புளி தக்காளிக் கலவையை அதில் ஊற்றி, தேவையான அளவு உப்புப்போடுங்க.உப்பு, புளிப்பு சரியா இருக்குதான்னு பார்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டுக்கோங்க.

ரசம் நுரைகூடி வரும்போது, கொத்துமல்லி இலைகளைத் தூவி இறக்கிடுங்க.

கமகமன்னு வறுத்த ரசம் ரெடி!

 


சுடச்சுட சாதம் வச்சு, பருப்பும் ரசமும் சேர்த்து சாப்பிடுங்க.இதுதான் சொர்க்கம்னு சொல்லுவீங்க :)

                                                            *******************

7 comments:

 1. ஆஹா.....ச்சுட ச்சுட சாப்டாச்சி .....பிரமாதம்.
  மழைகால இரவுகேளைகளில் !!

  ReplyDelete
 2. அருமை,படங்களுடன் அசத்தலான ஈசி ரெசிப்பி.

  ReplyDelete
 3. //கக்கு - மாணிக்கம் said...
  ஆஹா.....ச்சுட ச்சுட சாப்டாச்சி .....பிரமாதம்.
  மழைகால இரவுகேளைகளில் !!//

  வாங்க கக்கு மாணிக்கம் :)

  நன்றி!

  ReplyDelete
 4. //asiya omar said...
  அருமை,படங்களுடன் அசத்தலான ஈசி ரெசிப்பி// உங்களைப்பார்த்து முயற்சித்ததுதான் :) நன்றி ஆசியா!

  ReplyDelete
 5. மிக நன்றாக சொல்லி உள்ளீர்கள் நன்றி

  ReplyDelete
 6. நன்றி அனானி :)

  ReplyDelete
 7. எங்கூட்ல அடிக்கடி செய்ற ரசம் இது.அரைக்கிறப்ப பத்துப்பதினஞ்சு கொத்துமல்லி விதைகளையும் சேர்த்து கரகரப்பா அரைச்சு ரசம் பண்ணினா, ரசம் இன்னும் தெளிவா ருசியா இருக்கும் :-))

  ReplyDelete

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!