அடிசில்: எளியமுறை சிக்கன் குழம்பு

Monday, November 8, 2010

எளியமுறை சிக்கன் குழம்புகாய்கறிகள் சேர்த்துச்செய்யும் மற்ற குழம்புகளைவிட, மிக எளிதாகச் செய்யக்கூடிய சிக்கன் குழம்பு இது.

தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ

தக்காளி - 2

பெரிய வெங்காயம் -2

உருளைக்கிழங்கு - 1

தேங்காய்- 1/2 மூடி

முந்திரிப்பருப்பு - 5

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

தயிர் - 2 தேக்கரண்டி

வத்தல்தூள்-2 தேக்கரண்டி

மல்லித்தூள் -2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் -1/4 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

தாளிக்க,

பட்டை - 1 அங்குலத்துண்டு,

கிராம்பு - 3

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை

தேங்காயுடன்,முந்திரிப்பருப்பு, தக்காளி வெங்காயம் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைச்சு வச்சுக்கோங்க.

உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி வச்சுக்கோங்க.

வாணலியில் எண்ணெய்விட்டு, பட்டை, கிராம்பு போட்டுத் தாளித்து, அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்குங்க. வதங்கியதும் அதில் சுத்தம்செய்துவைத்த சிக்கனையும் தயிரையும் சேர்த்து, சிக்கன் நிறம்மாறும்வரை வதக்கிவிட்டு அடுப்பை அணைச்சுடுங்க.

பிரெஷர் குக்கரை அடுப்பில்வைத்து, வதக்கிய சிக்கன் கலவை, அரைத்த தேங்காய் விழுது, நறுக்கிய உருளைக்கிழங்கு,மசாலாப்பொடிகள் எல்லாவற்றையும் கலந்து, தேவையான உப்பும்போட்டு மூடி, ரெண்டு அல்லது மூணு விசில் விடுங்க.

பிரெஷர் நீங்கியதும் திறந்தால், அருமையான, மணமான
எண்ணெய் மிதக்கிற சிக்கன் கறி தயார்.சாதம்,சப்பாத்தி என எதனுடனும் சாப்பிடலாம்.

பி.கு: ******சிக்கனை  லேசாக, நிறம்மாறும்வரை தயிருடன் வதக்கினால்போதும்.*****

6 comments:

 1. காய்கறிகள் சேர்த்துச்செய்யும் மற்ற குழம்புகளைவிட, மிக எளிதாகச் செய்யக்கூடிய சிக்கன் குழம்பு இது.
  ரொம்ப சரி

  தாளிக்கும் பொது ரெண்டு புதினா இலையும் போட்டா நல்லாருக்கும்

  ReplyDelete
 2. //LK said...

  உள்ளேன்//

  வாங்க கார்த்திக், நன்றி :)

  ReplyDelete
 3. //பூங்குழலி said...

  காய்கறிகள் சேர்த்துச்செய்யும் மற்ற குழம்புகளைவிட, மிக எளிதாகச் செய்யக்கூடிய சிக்கன் குழம்பு இது.
  ரொம்ப சரி

  தாளிக்கும் பொது ரெண்டு புதினா இலையும் போட்டா நல்லாருக்கும்//

  இனிமே குழம்பு பண்ணும்போது, கட்டாயம் புதினா சேர்த்துக்கிறேன் :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூங்குழலி!

  ReplyDelete
 4. உங்கள் படைப்பு மிக அருமையா இருக்கு

  உங்கள் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்திலும் பூக்க விடலாமே http://tamilthottam.nsguru.com

  ReplyDelete
 5. இனி,தமிழ்த்தோட்டத்திலும் பதிந்துவிடுகிறேன், நன்றி!

  ReplyDelete

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!