அடிசில்: முட்டை பொட்டுக்கடலை அடை

Thursday, November 11, 2010

முட்டை பொட்டுக்கடலை அடை


முட்டையில் உடம்புக்குத் தேவையான சத்துப்பொருட்கள் நிறைய இருப்பது எல்லாரும் அறிந்ததே. அத்துடன் இன்னும் கொஞ்சம் புரதச்சத்துக் கூடுதலான பொட்டுக்கடலையையும் சேர்த்துச்செய்யும் இந்த அடை, காலை உணவாகவோ,மாலை டிஃபனாகவோ, சாதத்துக்குப் பக்க உணவாகவோ உண்ணுவதற்கு ஏற்றது. முட்டை பிடிக்காதவர்களுக்குக்கூட, இந்த அடை ரொம்பப் பிடிக்கும்.

இதற்குத் தேவையான பொருட்கள்...

முட்டை - 1

நறுக்கிய வெங்காயம் - 1 மேஜைக்கரண்டி

பச்சைமிளகாய் (நறுக்கியது) - 1

பொட்டுக்கடலைப் பொடி - 1 மேஜைக்கரண்டி

மிளகுத்தூள் -  1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 5 அல்லது 6

உப்பு - தேவையான அளவு

வெங்காயம், பச்சைமிளகாய் கறிவேப்பிலையை நறுக்கி வச்சுக்கோங்க.

முட்டையை உப்பு, மிளகுத்தூளுடன் அடித்து, அதில் பொட்டுக்கடலைப் பொடியையும் சேருங்க.

நன்றாக அடித்துவைத்த முட்டைக் கலவையோடு, நறுக்கியவற்றைக் கலந்துக்கோங்க.

தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு அடையாகப் பொரித்து எடுங்க.

சுவையான முட்டை பொட்டுக்கடலை அடை தயார். இந்தமாதிரியே, நிறைய முட்டைகள் சேர்த்துச் செய்யும்போது, குழிப்பணியாரக்கல்லில் ஊற்றியும் பொரித்து எடுக்கலாம்.

2 comments:

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!