Tuesday, November 16, 2010

பழம் பால்

பழம்பால்ன்னதும் பழசான பால்னு நினைச்சுக்காதீங்க... இது வாழைப்பழமும் தேங்காய்ப் பாலும் சேர்த்துச் செய்யப்படும் ருசியான பானம்.

தேங்காய்ப்பால் - 2 கப்
பொடிசெய்த வெல்லம் - 1/4 கப்
ரஸ்தாளி வாழைப்பழம் - 2

பழத்தை மெல்லிய வில்லைகளாக நறுக்கிவச்சுக்கோங்க.

தேங்காய்ப் பாலுடன் வெல்லத்தைச் சேர்த்துக் கரைத்து வடிகட்டி வச்சுக்கோங்க.

உயரமான க்ளாஸில் தேங்காய்ப்பாலை ஊற்றி, அதில் பழத் துண்டுகளைப்போட்டு, ஸ்பூனுடன் பரிமாறுங்க.

விருந்தினரோ, வீட்டு உறுப்பினர்களோ, நிச்சயம் அசந்துபோவாங்க சுவையில்.


பி.கு: வேணும்னா, ஏலக்காய்ப்பொடி கலந்துக்கலாம். ஆனா, தேங்காய்ப்பாலோட இயல்பான வாசனையை அது குறைத்துவிடும்.




 

2 comments:

  1. இது ஒன்றும் புதினமானதல்ல!அந்தக்காலத்தில்,ஏன் இப்போதும் கூட என்று நினைக்கிறேன்.வெள்ளிக்கிழமைகளில் மரக்கறி சாப்பாடு சாப்பிட்ட பின் தாய்மார்கள்(யாழ்ப்பாணத்து)இதே போல் செய்வதுண்டு!சோற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்!!!!!!!!!!!

    ReplyDelete
  2. நன்றி மேடம்

    ReplyDelete

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!