அடிசில்: December 2010

Sunday, December 12, 2010

பாசிப்பருப்பு முறுக்குபாசிப்பருப்பு - 1/2 கப்

அரிசி மாவு - 1 கப்

தோலில்லாத உளுத்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி

வெள்ளை எள் - 2 தேக்கரண்டி

வெண்ணெய் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரித்தெடுக்க

உப்பு - தேவையான அளவு

பாசிப்பருப்பை நன்கு குழைவாக வேகவைத்து எடுத்துக்கோங்க.

உளுத்தம்பருப்பை சிவக்காமல் வறுத்து, மிக்சியில் பொடிபண்ணிக்கோங்க.

மசித்த பருப்புடன், உப்பு, வெண்ணெய், உளுந்து மாவு, எள், அரிசிமாவு கலந்து தேவையான நீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்துகொள்ளுங்க.

தேன்குழல் அச்சில் பிழிந்து இருபுறமும் வேகவிட்டு எடுங்க.

மொறுமொறுப்பான பாசிப்பருப்பு முறுக்கு தயார்.

******************