Sunday, December 12, 2010

பாசிப்பருப்பு முறுக்கு



பாசிப்பருப்பு - 1/2 கப்

அரிசி மாவு - 1 கப்

தோலில்லாத உளுத்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி

வெள்ளை எள் - 2 தேக்கரண்டி

வெண்ணெய் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரித்தெடுக்க

உப்பு - தேவையான அளவு

பாசிப்பருப்பை நன்கு குழைவாக வேகவைத்து எடுத்துக்கோங்க.

உளுத்தம்பருப்பை சிவக்காமல் வறுத்து, மிக்சியில் பொடிபண்ணிக்கோங்க.

மசித்த பருப்புடன், உப்பு, வெண்ணெய், உளுந்து மாவு, எள், அரிசிமாவு கலந்து தேவையான நீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்துகொள்ளுங்க.

தேன்குழல் அச்சில் பிழிந்து இருபுறமும் வேகவிட்டு எடுங்க.

மொறுமொறுப்பான பாசிப்பருப்பு முறுக்கு தயார்.

******************

4 comments:

  1. நான் இதை கேள்விப்பட்டதே இல்லை நன்றி

    ReplyDelete
  2. அருமை.பார்க்கவே சூப்பராக இருக்கு.

    ReplyDelete
  3. கருக்கு மொருக்கு சூப்பரா இருக்கு

    ReplyDelete

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!