அடிசில்: 2011

Sunday, February 20, 2011

உருளைக்கிழங்கு மசாலா குழம்பு

தேவையானபொருட்கள் :-

நறுக்கிய உருளைக்கிழங்கு - 2

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

 வத்தல்தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலாப்பொடி - 1/2 தேக்கரண்டி

தேங்காய்த்துருவல் - 1 கப்

பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

 உப்பு- தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 3 தேக்கரண்டி

பட்டை  -  சிறுதுண்டு

கிராம்பு - 2

கறிவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை: -

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கோங்க.

உருளையைக் கழுவி கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கோங்க.

பச்சைமிளகாயைக் கீறிவச்சுக்கோங்க.

தேங்காயைப்  பொட்டுக்கடலையுடன்சேர்த்து, நைசாக அரைத்து, அதனுடன் தக்காளிகளையும் நறுக்கிச் சேர்த்து அரைச்சுக்கோங்க.

வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக்கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிச்சுக்கோங்க.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து, அரைஸ்பூன் உப்புப்போட்டு வதக்குங்க.

வெங்காயம் வதங்கியதும், உருளைக்கிழங்குத் துண்டுகளை சேர்த்து வதக்குங்க.

கிழங்கு ஓரளவு வெந்ததும், அரைத்துவைத்த மசாலா மற்றும் மசாலாப்பொடிகளைச் சேர்த்து, நன்கு கலந்துவிடுங்க. தேவையான அளவு உப்புப் போடுங்க.

 கலவை கொதித்ததும், வாணலியை மூடி, 5 நிமிடங்கள் சிறுதீயில் வையுங்க.

குழம்பு கெட்டியாகி, எண்ணெய் மிதந்ததும் இறக்கி, கொத்துமல்லி தூவிப் பரிமாறுங்க.

இந்தக் குழம்போடு சேர்த்துச் சாப்பிட, சாதமும் அப்பளம் அல்லது வடகமும் போதும். இட்லி தோசைக்கும் இது நன்றாக இருக்கும்.

படம் : இணையத்திலிருந்து

Wednesday, January 26, 2011

புடலங்காய் பொரியல்

 


தேவையான பொருட்கள்

புடலங்காய் - 1

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க,

எண்ணெய் - 3 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு -1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10

பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை :-

சிறிய புடலங்காய் ஒன்றை நடுவில் நறுக்கி சுத்தம்செய்து, குறுக்குவாட்டில் நீளநீளமாக நறுக்கிக்கோங்க.

வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிக்கக்கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து, அதில் நறுக்கிய புடலங்காய்த் துண்டுகளைப் போடுங்க.

தேவையான உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து ஒரு நிமிஷம் வதக்கிவிட்டு, வாணலியை மூடி, சிறுதீயில் வேகவிடுங்க. (தண்ணீர் சேர்க்கவேண்டாம். புடலங்காயிலிருக்கும் தண்ணீரே போதுமானது)

இடையிடையே கிளறிவிட்டு, காய் வெந்ததும், துருவிய தேங்காயைத் தூவி, மேலும் ஒருநிமிடம் வதக்கி இறக்குங்க.

சுவையான, புடலங்காய்பொரியல் தயார்.

இது பத்தே நிமிஷத்தில் செய்துவிடக்கூடிய மிக எளிதான கூட்டு. வத்தக்குழம்பு,புளிக்குழம்பு இவற்றோடு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

                                                                          ***