திண்ணை தமிழ் : January 2011

Wednesday, January 26, 2011

புடலங்காய் பொரியல்


மிக மிக விரைவாகச் செய்யக்கூடிய மிகச் சுவையான புடலங்காய் பொரியல் செய்முறை!

தேவையான பொருட்கள்

புடலங்காய் - 1

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க,

எண்ணெய் - 3 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு -1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10

பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை :-

சிறிய புடலங்காய் ஒன்றை நடுவில் நறுக்கி சுத்தம்செய்து, குறுக்குவாட்டில் நீளநீளமாக நறுக்கிக்கோங்க.

வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிக்கக்கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து, அதில் நறுக்கிய புடலங்காய்த் துண்டுகளைப் போடுங்க.

தேவையான உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து ஒரு நிமிஷம் வதக்கிவிட்டு, வாணலியை மூடி, சிறுதீயில் வேகவிடுங்க. (தண்ணீர் சேர்க்கவேண்டாம். புடலங்காயிலிருக்கும் தண்ணீரே போதுமானது)

இடையிடையே கிளறிவிட்டு, காய் வெந்ததும், துருவிய தேங்காயைத் தூவி, மேலும் ஒருநிமிடம் வதக்கி இறக்குங்க.

சுவையான, புடலங்காய்பொரியல் தயார்.

இது பத்தே நிமிஷத்தில் செய்துவிடக்கூடிய மிக எளிதான கூட்டு. வத்தக்குழம்பு,புளிக்குழம்பு இவற்றோடு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

                                                                          ***