திண்ணை தமிழ் : February 2011

Sunday, February 20, 2011

உருளைக்கிழங்கு மசாலா குழம்பு

உருளைக்கிழங்கு பிடிக்காது என்பவர்களையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் குழம்பு இது. சாதத்துடன் மட்டுமன்றி, இட்லி, தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடனும் சேர்த்துச் சாப்பிட ஏற்றது.
Photo by Syd Wachs on Unsplash

தேவையானபொருட்கள் :-

நறுக்கிய உருளைக்கிழங்கு - 2

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

 வத்தல்தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலாப்பொடி - 1/2 தேக்கரண்டி

தேங்காய்த்துருவல் - 1 கப்

பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

 உப்பு- தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 3 தேக்கரண்டி

பட்டை  -  சிறுதுண்டு

கிராம்பு - 2

கறிவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை: -

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கோங்க.

உருளையைக் கழுவி கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கோங்க.

பச்சை மிளகாயைக் கீறி வச்சுக்கோங்க.

தேங்காயைப்  பொட்டுக்கடலையுடன் சேர்த்து, நைசாக அரைத்து, அதனுடன் தக்காளிகளையும் நறுக்கிச் சேர்த்து அரைச்சுக்கோங்க.

வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிச்சுக்கோங்க.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து, அரை ஸ்பூன் உப்புப்போட்டு வதக்குங்க.

வெங்காயம் வதங்கியதும், உருளைக்கிழங்குத் துண்டுகளை சேர்த்து வதக்குங்க.

கிழங்கு ஓரளவு வெந்ததும், அரைத்துவைத்த தேங்காய், தக்காளி மசாலா மற்றும் மசாலாப்பொடிகளைச் சேர்த்து, நன்கு கலந்துவிடுங்க. தேவையான அளவு உப்புப் போடுங்க.

 கலவை கொதித்ததும், வாணலியை மூடி, 5 நிமிடங்கள் சிறுதீயில் வையுங்க.

குழம்பு கெட்டியாகி, எண்ணெய் மிதந்ததும் இறக்கி, கொத்துமல்லி தூவிப் பரிமாறுங்க.

இந்தக் குழம்போடு சேர்த்துச் சாப்பிட, சாதமும் அப்பளம் அல்லது வடகமும் போதும். இட்லி தோசைக்கும் இது நன்றாக இருக்கும்.

படம் : இணையத்திலிருந்து