அடிசில்: உளுத்தங் கஞ்சி

Saturday, August 11, 2012

உளுத்தங் கஞ்சி
உடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லதுன்னு சொல்லுவாங்க நம்ம பெரியவங்க. வாத சம்பந்தமான நோய்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், கூட மிக நல்லது உளுந்து. எளிதாகச் செய்யப்படும் இந்த உளுத்தங் கஞ்சி மிகவும் மணமானதும் சுவையானதும் கூட. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவாகக் கொடுக்கக்கூடிய சத்தான உணவு இது.

உளுந்து உடலுக்கு பலமும் நலமும் தரக்கூடிய ஒரு உணவுப் பொருள். இது, பித்தத்தையும் உடல் சூட்டையும் குறைத்து எலும்புகளுக்கும் நரம்புகளுக்கும் வலிமையளிக்கக் கூடியது  என்பது அகத்தியரின் அறிவுரை.

தேவையான பொருட்கள்

தோலில்லாத வெள்ளை உளுந்து - 100 கிராம்

பச்சரிசி - 50 கிராம்

பால் -1/2 லிட்டர்

சர்க்கரை - தேவைக்கேற்ப

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:-

உளுந்தம்பருப்பையும், பச்சரிசியையும் நீரில் கழுவி, குக்கரில் வைத்து நன்றாகக் குழைய வேகவைத்துக்கொள்ளவும். குக்கரைத் திறந்தபின் வெந்த பருப்பையும் அரிசியையும் கரண்டியால் நன்கு மசித்துவிட்டு, பாலை அதில் சேர்க்கவும். தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து சிட்டிகை உப்பும் சேர்த்துக் கலந்துவிடவும். சுவையான உளுத்தங் கஞ்சி தயார்.

தேவையானா, ஏலக்காய்ப்பொடி சேர்க்கலாம். ஆனா, அப்படிச் சேர்க்கும்போது உளுந்தோட இயல்பான வாசனை இல்லாம போயிடும். உளுத்தம்பருப்புக்குப் பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் இதுபோலக் கஞ்சி செய்யலாம்.

முழு வீடியோ செய்முறை இங்கே...

https://youtu.be/8sDyuHYWuhE


5 comments:

 1. சர்க்கரை உடல் நலத்துக்கு நல்லதல்ல, இதற்குப் பதில் கரும்பு வெள்ளம் சேர்த்துக்கொள்ளலாமா?

  ReplyDelete
 2. தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளென்றால் பனைவெல்லம் சேர்த்துக்கொள்ளலாமென்றும் சொல்வார்கள்.

  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 3. என் கணவரின் தென்காசி அத்தை அடிக்கடி உளுத்தம் கஞ்சி செய்வார்கள்.
  அருமையான உணவு வகைகளை(மறந்த) சொல்லி வருகிறீர்கள்.

  ReplyDelete
 4. பாசி பருப்பு சேர்த்து செய்திருக்கிறேன் உளுந்து தெரியாது. முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 5. Instead of idli dosa, i wanted to add ulundu in some other way. Thank u so much for the recipe shared here.

  ReplyDelete

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!