திண்ணை தமிழ் : August 2018

Saturday, August 25, 2018

நிலக்கடலை வறுப்பது எப்படி? | How to roast peanuts? |Salted peanuts in minutes


மணலில் வறுத்தது போன்ற மணமான சுவையான நிலக்கடலையை வீட்டிலேயே வறுக்கும் எளிமையான முறை! 

தேவையான பொருட்கள்

நிலக்கடலை - 1 கப்

தூள் உப்பு - 3/4 கப்

செய்முறை

அடி கனமான வாணலியில் தூள் உப்பைச் சேர்க்கவும்.

உப்பு சிறிது சூடானதும், அதில் கடலையைச் சேர்த்து, மிதமான தீயில் வறுக்கவும்.

சில நிமிடங்களில் கடலையின் மேல் தோல் வெடித்துப் பிரிய ஆரம்பிக்கும். மேலும் சிறிது நேரம் வறுத்ததும் கடலையின் மணம் வர ஆரம்பிக்கும்.

அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு சல்லடைக் கரண்டியால் கடலையை உப்பைவிட்டுப் பிரித்து எடுக்கவும்.

உப்பில் அதிக நேரம் இருந்தால் கடலை உப்பின் சூட்டில் கருகிவிடலாம்.

மணமான, லேசான உப்புச் சுவை உடைய வறுத்த கடலை தயார்!


via IFTTT

Monday, August 13, 2018

சங்ககால சமையல் | Sanga kala Samaiyal
சங்கககால மக்களின் சமையலும் உணவுப் பழக்கங்களும் பற்றிப் பண்டைய இலக்கியங்க்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள்!via IFTTT