திண்ணை தமிழ் : கருப்பட்டி மிட்டாயும் கடந்தகால நினைவுகளும்

Thursday, October 11, 2018

கருப்பட்டி மிட்டாயும் கடந்தகால நினைவுகளும்


தென் தமிழகத்தின் பிரபலமான இனிப்பு வகைகளுள் இந்தக் கருப்பட்டி மிட்டாயும் ஒன்று. இயல்பாகவே பனை மரங்கள் அதிகமான தென் தமிழ்நாட்டில் பனைப் பொருட்களான, பதனீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கிழங்கு, தவுண் எனப்படும் உணவுப்பொருட்களெல்லாம் மிகவும் பிரபலம்.கருப்பட்டி மிட்டாய் பல இடங்களில் கிடைக்குமென்றாலும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ ஈரால் எனப்படும் இடத்தில் கிடைக்கும் கருப்பட்டி மிட்டாய் மிகவும் பிரபலம்.


கீழுள்ள படத்தில் இருப்பது சீனி மிட்டாய். இதுவும் அநேகமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கிடைக்கும். இதனை சோத்து மிட்டாய், ஏணிப்படி மிட்டாய் என்றும் கூறுவர்.கீழே படத்திலிருப்பதுதான் பனைவெல்லம் எனப்படும் கருப்பட்டி.  பதனீரைக் காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் அருமையான இனிப்பு. பழங்காலத்தில் சர்க்கரைக்கு மாற்றாக நம் மக்கள் பயன்படுத்திவந்த மிகவும் ஆரோக்கியமான இனிப்பு.via IFTTT

No comments:

Post a Comment

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!